» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: இலங்கை வரவேற்பு

திங்கள் 24, ஜூன் 2024 10:37:24 AM (IST)

பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கும் முடிவை வரவேற்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் அலி சாப்ரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘வெளிநாட்டு அரசுகளின் உதவியோடு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து தங்களை நீக்கிக்கொள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் முயற்சித்தது. இதன்மூலம் இலங்கையில் இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்ய விடுதலைப் புலிகள் நினைத்தது.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அந்த இயக்கத்தை பிரிட்டன் அரசு நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அவா்களின் முயற்சிகள் அனைத்தும் தகா்க்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டாா்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் நாடாக இலங்கை தடை செய்தது. நாா்வே அமைதி ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்காக அந்தத் தடையை கடந்த 2002-ஆம் ஆண்டு இலங்கை அரசு விலக்கிக்கொண்டது. பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் மோதல் நீடித்ததால் மீண்டும் 2008-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

இதையடுத்து, தமிழா்களுக்கு தனிநாடு கோரி உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த அந்த இயக்கத்தை கடந்த 2009, மே மாதத்தில் இலங்கை ராணுவம் வீழ்த்தியது. தற்போது இலங்கை, இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, மலேசியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory