» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் செயற்கைக்கோள் அனுப்பியபோது குடியிருப்பு பகுதியில் விழுந்த ராக்கெட்!
திங்கள் 24, ஜூன் 2024 8:20:16 AM (IST)
சீனாவில் செயற்கைக்கோள் அனுப்பியபோது குடியிருப்பு பகுதியில் ராக்கெட்டின் ஒரு பகுதி விழுந்து நொறுங்கியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து சீனாவின் ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோளை ஏவுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் லாங் மார்ச்-2சி என்ற ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. ஆனால் அனுப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே ராக்கெட்டின் ஒரு பகுதி வெடித்து சிதறி குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் சாலையில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக லாங் மார்ச்-2சி வகை ராக்கெட்டில் எரிபொருளாக நைட்ரஜன் டெட்ராக்சைடு, டைமெதில் ஹைட்ராசின் ஆகிய வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொடிய நச்சுத்தன்மையுள்ள இந்த வாயுக்கள் மனிதர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனினும் ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் விழுந்ததால் இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், `ராக்கெட்டில் இருந்து வெடித்து சிதறும் பாகங்கள் கடலுக்குள் விழும் வகையில் திட்டமிடப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ராக்கெட்டின் பாகம் வெடித்து சிதறி துரதிர்ஷ்டவசமாக குடியிருப்பு பகுதியில் விழுந்து உள்ளது' என தெரிவித்தனர். அதேசமயம் இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவு
சனி 15, பிப்ரவரி 2025 12:55:06 PM (IST)

மோடி - ட்ரம்ப் சந்திப்பு : பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்பந்தம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:29:36 PM (IST)

இலங்கை மின்திட்டங்களில் இருந்து அதானி குழுமம் விலகல் : 440 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரத்து!!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:30:04 PM (IST)

உக்ரைன் - ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சு: டிரம்ப் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:25:41 PM (IST)

பிரான்சில் புதிய இந்திய தூதரகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
புதன் 12, பிப்ரவரி 2025 4:45:22 PM (IST)

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம்
புதன் 12, பிப்ரவரி 2025 11:46:06 AM (IST)
