» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தென்கிழக்கு ஆசியாவில் முதல்முறை : தன்பாலின திருமணத்திற்கு தாய்லாந்து சட்ட அங்கீகாரம்
புதன் 19, ஜூன் 2024 12:04:37 PM (IST)

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதல் நாடாக தன்பாலின திருமணத்திற்கு தாய்லாந்து சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது.
தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேறியது. இதனை தொடர்ந்து செனட் சபையிலும் திருமண சமத்துவ மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவிற்கு 130 பேர் ஆதரவாக வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் வெளியேறினார். 4 பேர் எதிர்த்து வாக்களித்தனர். ஏற்கனவே, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சபையில் கடந்த மார்ச் மாதம் இந்த மசோதா நிறைவேறியது. இதன்மூலம் விரைவில் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இருக்கிறது.
இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த மசோதா செனட் கமிட்டி ஆய்வு செய்யும். பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மன்னரிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் சட்டமாக்கப்படும். இதன் மூலம் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து விளங்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்
சனி 26, ஏப்ரல் 2025 12:21:09 PM (IST)

இந்திய-பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐநா வேண்டுகோள்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:33:40 PM (IST)

சிந்து நதி நீரை நிறுத்தியது போர் நடவடிக்கை: பாகிஸ்தான் எச்சரிக்கை!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:02:13 PM (IST)

கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை : பாகிஸ்தான் அரசு உத்தரவு
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:19:32 PM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்: நெதன்யாகு
புதன் 23, ஏப்ரல் 2025 3:50:45 PM (IST)

ஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்பு இல்லை : பாகிஸ்தான் அமைச்சர் சொல்கிறார்
புதன் 23, ஏப்ரல் 2025 11:41:14 AM (IST)
