» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குற்ற வழக்கில் சிக்கிய மகனை மன்னிக்கவே மாட்டேன்: ஜோ பைடன் திட்டவட்டம்

சனி 8, ஜூன் 2024 11:58:18 AM (IST)குற்ற வழக்கில் சிக்கிய மகனை மன்னிக்கவே மாட்டேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்க முயற்சித்தது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக டெலாவேர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் முதல் முறையாக அதிபரின் மகன் மீது இத்தகைய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் அந்நாட்டின் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த வழக்கில் தனது மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கவே மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறுகையில், அமெரிக்க அதிபர் தனது மகனை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வழக்கு தற்போது கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory