» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஸ்ரீசேனா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 7, ஜூன் 2024 11:26:05 AM (IST)

இலங்கையில் கொலையாளிக்கு முன்னாள் அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேனா வழங்கிய பொதுமன்னிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இலங்கையில்  கடந்த 2005-ஆம் ஆண்டு சுற்றுலா வந்திருந்த 19 வயது ஸ்வீடன் பெண்ணை ஜெயமஹா அடித்துக் கொலை செய்தாா். கொல்லப்பட்ட பெண்ணின் மண்டையொடு 64 இடங்களில் உடைந்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக நடைபெற்ற வழக்கில் ஜெயமஹா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவருக்கு முதலில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மேல்முறையீட்டில் மரம தண்டைனையும் விதிக்கப்பட்டது.

எனினும், ஜெயமஹாவுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் மைத்ரிபால ஸ்ரீசேன பொதுமன்னிப்பு வழங்கினாா். அதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்தது.

மேலும், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் (இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஸ்ரீசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக ஸ்ரீசேனாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையிலேயே அவா் இதுவரை பாதியைத்தான் செலுத்தியுள்ளாா் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory