» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

இன்று 'ரீல்ஸ்' மற்றும் இன்ஃப்ளூயன்சர்களின் காலம். ஆனால் குறுக்குவழி உங்களை முடக்கிவிடும் என்ற எச்சரிக்கையை இளைஞர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
'இந்திய குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்' (Triumph of the Indian Republic: My Life, My Struggles) என்ற தலைப்பில் இச்சுயசரிதை நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் தொடக்ககால வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் பொதுவாழ்வு அனுபவங்களை இந்நூல் விரிவாக விளக்குகிறது.
நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களுக்குப் பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கி பேசுகையில், "தலைவர்களின் சுயசரிதைகளை இளைஞர்கள் தவறாமல் வாசிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைப் அனுபவங்களையும், ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
"இன்று 'ரீல்ஸ்' மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்களின் காலம். ஆனால் ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் 'Shortcut will cut you short' (குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்) என்ற எச்சரிக்கையை இளைஞர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்."
சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்படாமல், அனைத்துச் சவால்களையும் வெல்லும் உறுதி படைத்த இளைஞர்களே தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் பாரம்பரிய சின்னமாகத் திகழும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது குழந்தைப் பருவ துயரங்கள், வறுமை மற்றும் பொது வாழ்வின் போராட்டங்கள் குறித்த பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, நூலை வெளியிட்ட பிரதமருக்கும் வருகை தந்த சான்றோர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி ஊழியர்கள் செப்.11-ல் வேலைநிறுத்தம்: 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:51:02 PM (IST)

தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 3:46:58 PM (IST)

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறப்பதில் என்ன பிரச்சனை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:59:02 AM (IST)

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:52:44 AM (IST)

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:57:53 PM (IST)

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)









மோடிஜி பக்தன்Aug 15, 2026 - 08:48:20 PM | Posted IP 162.1*****