» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)

கர்நாடகாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக தமிழக முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் டி.கே. சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய்யிடம் தொலைபேசியில் பேசியதாகவும், கர்நாடகாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக அவர் தற்போது கர்நாடகாவுக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும் முதல்வருமான டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் குறித்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.செய்தியாளர்கள் சந்திப்பில் டி.கே. சிவக்குமார் பேசியதாவது: "நானும், தமிழக முதல்வர் விஜய்யும் அவரவர் மாநில மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். காவிரி விவகாரம் மற்றும் இரு மாநில நிலவரங்கள் குறித்து நாங்கள் இருவரும் தொலைபேசியில் பரஸ்பரம் விரிவாகப் பேசிக்கொண்டோம்.
அவர் வரும் 3-ஆம் தேதி கர்நாடகா வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் காரணமாக அவரது வருகை இன்னும் உறுதியாகவில்லை. கர்நாடகாவில் தற்போது சூழல் சரியாக இல்லை. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். அவர் இங்கு வரும்போது போராட்டங்கள் எதுவும் நடைபெற்றால் அது சரியாக இருக்காது.
எங்கள் மாநிலத்திற்கு விருந்தினராக வருபவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே சிறிது காலம் காத்திருக்கலாம்; சூழல் சீரடைந்த பின்னர் நாங்கள் இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவோம்."இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ.29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!
வெள்ளி 31, ஜூலை 2026 5:52:38 PM (IST)

மகாராஷ்டிராவில் பயங்கரம்: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 12:36:48 PM (IST)







