» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு முருகன் படம் வழங்கி வாழ்த்து பெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி!

வியாழன் 2, ஏப்ரல் 2026 5:19:20 PM (IST)



உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சு.ராஜேஷ், அவருக்குக் கடவுள் முருகனின் படத்தை நினைவுப் பரிசாக வழங்கி வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சு.ராஜேஷ். 2011-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், உத்தரப் பிரதேச கேடரில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு டிஐஜியாக (DIG) பதவி உயர்வு பெற்ற இவர், தற்போது பாந்தா சரகத்தில் பணியாற்றி வருகிறார்.

தனது டிஐஜி பணியில் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் குறித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேற்று சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார். அப்போது, தமிழ்க் கடவுளான பழனி முருகன் திருவுருவப் படத்தை முதல்வருக்குப் பரிசாக வழங்கினார்.

முருகன் படத்தைப் பெற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகுந்த மகிழ்ச்சியுடன், "சிவன் மற்றும் பார்வதியின் மூத்த மகனாகவும், செல்ல மகனாகவும் இருப்பவர் முருகன்" எனக் குறிப்பிட்டுப் பாராட்டினார். ஒரு துறவியான முதல்வருக்கு இதுவரை யாரும் முருகன் படத்தைப் பரிசாக வழங்கியதில்லை என்பதால், இந்த நிகழ்வு உ.பி. மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச காவல்துறையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த டி.பிரகாஷ் மற்றும் ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழக அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory