» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

சனி 21, மார்ச் 2026 4:12:29 PM (IST)

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியின் போது, உடன் வந்த பெண் எஸ்.பி.க்கு தனது காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், 2021-ஆம் ஆண்டு ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவர் முதலில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜேஷ் தாஸைக் கைது செய்யவும், அவர் சரணடையவும் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory