» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தட்டுப்பாட்டைப் போக்க இந்தியாவிற்கு வருகிறது 93,000 டன் எரிவாயு: மத்திய அரசு நடவடிக்கை!

ஞாயிறு 15, மார்ச் 2026 10:20:20 AM (IST)



பாரசீக வளைகுடா பிராந்தியத்திலிருந்து மேலும் 2 கப்பல்களில் 93 ஆயிரம் டன் எல்.பி.ஜி. எரிவாயு நாளை மற்றும் நாளை மறுநாள் இந்தியா வரவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் ராஜேஷ்குமார் சின்கா இது குறித்துக் கூறுகையில்: பாரசீக வளைகுடா பகுதியில் இருந்த 24 இந்தியக் கப்பல்களில், தற்போது 'சிவாலிக்' மற்றும் 'நந்தாதேவி' ஆகிய 2 கப்பல்கள் இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் மொத்தம் 92,700 டன் எல்.பி.ஜி. எரிவாயு உள்ளது.

இக்கப்பல்கள் மார்ச் 16 (நாளை) மற்றும் 17-ஆம் தேதிகளில் குஜராத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏதுமில்லை. கச்சா எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது. கறுப்புச் சந்தைப்படுத்துதல் மற்றும் பதுக்கலைத் தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து எண்ணெய் நிறுவனங்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன" என்றார்.

எரிவாயு விநியோகத்தில் எவ்வித இடையூறும் இல்லாத நிலையிலும், பீதியால் மக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே நுகர்வோருக்குப் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன:

முன்பதிவு இடைவெளி: நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் டெலிவரி எடுக்கப்பட்டதற்கும் அடுத்த முன்பதிவுக்கும் இடையே குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். கிராமப்புற நுகர்வோருக்கு இந்த இடைவெளி அதிகபட்சம் 45 நாட்கள் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் மட்டுமே சிலிண்டர்களை ஆர்டர் செய்யுமாறும், தேவையற்ற முன்பதிவுகளைத் தவிர்க்குமாறும் நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வளைகுடா பிராந்தியத்தில் தற்போது 611 இந்திய மாலுமிகளுடன் 22 இந்தியக் கப்பல்கள் உள்ளன. இந்தியக் கடற்படை மற்றும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் இணைந்து 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை மூலம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory