» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்​லி​யில் ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:18:58 PM (IST)



டெல்​லி​யில் 5 நாள்கள் நடைபெறும் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார்.

டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் 5 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். பாரத் மண்​டபத்​தில் 600-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. இதில் முக்​கிய அரங்குகளை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். பல்​வேறு நிறுவனங்களின் ஏஐ நிபுணர்​களு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார்.

ஐ.நா.பொதுச்​செய​லா​ளர் அந்​தோணியோ குத்​தேரஸ் மற்​றும் பிரான்​ஸ், பிரேசில், சுவிட்​சர்​லாந்​து, கிரீஸ், பின்​லாந்​து, நெதர்லாந்து, கஜகஸ்​தான், ஸ்லோ​வாக்​கி​யா, எஸ்​டோனி​யா, ஐக்கிய அரபு அமீரகம், பொலி​வி​யா, மொரீஷியஸ், செஷல்​ஸ், கயானா உட்பட 20 நாடு​களின் தலை​வர்​கள், பல்​வேறு நாடு​களை சேர்ந்த 50 அமைச்​சர்​கள், உலகின் முன்​னணி நிறு​வனங்​களை சேர்ந்த 50 சிஇஓக்​கள் வெவ்​வேறு நாட்​களில் டெல்லி ஏஐ மாநாட்டில் பங்​கேற்க உள்​ளனர். சுமார் 840-க்​கும் மேற்​பட்ட நிறுவனங்​கள் மாநாட்​டில் பங்​கேற்று உள்​ளன.

பிரதமர் மோடி வரவேற்பு: பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்லி பாரத் மண்​டபத்​தில் திங்​கள் ​கிழமை தொடங்​கிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்​தியா நடத்​துகிறது. இந்த மாநாட்​டில் பங்​கேற்​றுள்ள உலக நாடு​களை சேர்ந்த தலை​வர்​கள், தொழில்​துறை தலை​வர்​கள், புதுமை கண்​டு​பிடிப்​பாளர்​கள், கொள்கை வகுப்​பாளர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள், தொழில்​நுட்ப ஆர்​வலர்​களை வரவேற்​கிறேன். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாநாடு குறித்து மத்​திய மின்​னணு துறை இணை​யமைச்​சர் ஜிதின் பிர​சாதா கூறும்​போது, "டெல்​லி​யில் ஏஐ உச்சி மாநாடு அல்ல, ஏஐ மகா கும்​பமேளா தொடங்கி உள்​ளது. பல்​வேறு நாடு​களின் தலை​வர்​கள், உலகம் முழு​வதும் இருந்து ஏஐ நிபுணர்​கள், ஏஐ ஆராய்ச்​சி​யாளர்​கள், முன்​னணி நிறு​வனங்​கள் மாநாட்​டில் பங்​கேற்று உள்​ளன” என்று தெரி​வித்​தார்.

யுபிஐ ஒரே உலகம்: உலகம் முழு​வதும் இருந்து சுமார் 5,000-க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்​டினர் டெல்லி ஏஐ உச்சி மாநாட்​டில் பங்கேற்று உள்​ளனர். அவர்​களின் பணப் பரி​மாற்​றத்​துக்​காக தேசிய பணப் பரி​மாற்​றக் கழகம் (என்​பிசிஐ) சார்​பில் "யுபிஐ ஒரே உலகம்” என்ற பெயரில் டிஜிட்​டல் பணப் பரி​மாற்ற சேவை தொடங்​கப்​பட்டு உள்​ளது. டெல்லி சர்​வ​தேச விமான நிலை​யம், பாரத் மண்​டபத்​தின் 14, 16 அரங்​கு​களில் "யுபிஐ ஒரே உலகம்” சேவையைப் பெற முடி​யும்.

இதன்​படி மாநாட்​டில் பங்​கேற்​றுள்ள வெளி​நாட்​டினர் ரூ.25,000-ஐ "யுபிஐ ஒரே உலகம்” வாலட்​டில் வரவு வைத்து இந்​தி​யா​வில் பொருட்​கள் வாங்க முடி​யும். யுபிஐ கியூஆர் கோடு நடை​முறை மூலம் டிஜிட்​டல் பணப் பரி​மாற்​றங்​களை மேற்​கொள்​ளலாம். தேவைப்​பட்​டால் கூடு​தலாக ரூ.25,000-ஐ வாலட்​டில் வரவு வைக்கலாம். ஆனால் ஒரு மாதத்​தில் அதி​கபட்​ச​மாக ரூ.50,000 வரை மட்​டுமே வாலட்​டில் வரவு வைக்க முடி​யும். இந்​தி​யா​வில் இருந்து சொந்த நாட்​டுக்கு திரும்​பும்​போது வெளி​நாட்​டினரின் வாலட்​டில் மீதமிருக்​கும் பணம் அவர்​களின் வெளி​நாட்டு வங்​கிக் கணக்​கு​களில் செலுத்​தப்​படும்.

இதுகுறித்து என்​பிசிஐ வட்​டாரங்​கள் கூறும்​போது, "இந்​தி​யா​வின் யுபிஐ பணப் பரி​மாற்ற நடை​முறைக்கு உலகம் முழு​வதும் பெரும் வரவேற்பு கிடைத்து வரு​கிறது. பிரான்​ஸ், ஐக்​கிய அரபு அமீரகம், கத்​தார், சிங்​கப்​பூர், நேபாளம், பூடான், மொரீஷியஸ், இலங்கை உள்​ளிட்ட நாடு​களில் யுபிஐ சேவை அறி​முகம் செய்​யப்​பட்டு உள்ளது. சைப்​ரஸ், மலேசியா உள்​ளிட்ட 30-க்​கும்​ மேற்​பட்​ட நாடுகள்​ யுபிஐ சேவையை விரை​வில்​ தொடங்​க உள்​ளன” என்​று தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory