» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மினிமம் பேலன்சை ரூ.50,000 ஆக உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சனி 9, ஆகஸ்ட் 2025 4:41:15 PM (IST)

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும், தங்கள் வங்கிகளின் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றி அதனை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா, பஞ்சாப் நேஷனல் வங்கிகள் மினிமம் பேலன்ஸை உயர்த்தியது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ-யில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும், இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25 ஆயிரம், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10ஆயிரமாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உயர்த்தி உள்ளது. இந்த விதிகள் கடந்த 1-ம் தேதியில் இருந்து புதிதாக கணக்கு தொடங்குபவர்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய MAMB தொடரும் என அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களையும் வங்கி மாற்றியுள்ளது. கிளைகள் மற்றும் பண மறுசுழற்சி இயந்திரங்களில் பண வைப்புகளுக்கு, வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும். அதன் பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 வசூலிக்கப்படும்.


மக்கள் கருத்து

M BabuAug 11, 2025 - 07:33:29 AM | Posted IP 162.1*****

orula vera bank ilaya ?ac close panitu pnga pa avlothana

இனிAug 9, 2025 - 08:01:50 PM | Posted IP 104.2*****

பிச்சை எடுக்க வேண்டியிருக்கும்

தமிழ்ச்செல்வன்Aug 9, 2025 - 04:49:47 PM | Posted IP 162.1*****

அடுத்து திவாலாகப் போகும் வங்கி இதுதான்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory