» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

செவ்வாய் 8, ஜூலை 2025 3:41:11 PM (IST)



ரியல் எஸ்டேட் பண மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட இடத்தில் ரூ.34.80 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

மகேஷ் பாபு விளம்பரப்படுத்தியதால் அந்நிறுவனம் மீதான நம்பகத்தன்மை வாடிக்கையாளர்களுக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தால் விற்கப்பட்ட இடத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, பண மோசடியில் நடிகர் மகேஷ் பாபுவுக்கும் தொடர்பிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்டுள்ள பண மோசடி வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மகேஷ் பாபுவுக்கு கடந்த ஏப்ரலில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மகேஷ் பாபு ரூ. 5.90 கோடி பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடைபெறுகிறது.

ரியல் எஸ்டேட்டில் மோசடி திட்டங்களால் ரூ. 100 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், மேற்கண்ட நிறுவனங்கள் மீதான வழக்கும் ஒருபகுதியாக உள்ளது. எனினும், மகேஷ் பாபு மீது அமலாக்கத்துறையால் குற்ற வழக்கு இதுவரை பதியப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory