» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை - பிரியங்கா வலியுறுத்தல்

ஞாயிறு 15, ஜூன் 2025 11:19:04 AM (IST)

அகமதாபாத் விமான விபத்து போன்று எதிர்காலத்தில் தவறுகள் நிகழக் கூடாது என்று வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171), இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) லண்டனுக்கு வியாழக்கிழமை பிற்பகலில் புறப்பட்டது.

ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் பி.ஜே அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழப்பாக வெடித்துச் சிதறியது. நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா காந்தி வயநாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பேசியதாவது: "விமான விபத்தில் என்ன தவறு நடந்தது என்பதை கண்டறிவது மிக மிக முக்கியம். விசாரணை முகமைகள் அடுத்த சில நாள்களில், என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு தெரிவிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். 

அதன்பின் எதிர்காலத்தில், தவறுகளை சரிசெய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றைச் செய்து, மக்களின் உயிர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த துயர நிகழ்வு, நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நமக்கு கற்பித்திருக்கிறது” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory