» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 76,181 மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
சனி 14, ஜூன் 2025 3:44:23 PM (IST)
நீட் இளநிலை 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ இந்த என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, 'NEET UG 2025 Result' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், தேர்வு முடிவு பிடிஎப் வடிவில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவிகித இடங்களுக்கு (எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட) மருத்துவ கலந்தாய்வு குழு கலந்தாய்வை நடத்த உள்ளது. மீதமுள்ள 85 சதவிகித இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வை நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வதோதராவில் பழமை வாய்ந்த பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்: 13 பேர் பலி
வியாழன் 10, ஜூலை 2025 8:02:50 AM (IST)

நிலச்சரிவில் வீடுகள் தரைமட்டம்: 67 பேரின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்!
புதன் 9, ஜூலை 2025 5:51:49 PM (IST)

ஆறாம் வகுப்பு மாணவர்களில் 47% பேருக்கு வாய்ப்பாடு தெரியவில்லை : ஆய்வில் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:19:52 AM (IST)

பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் அமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா
செவ்வாய் 8, ஜூலை 2025 4:39:15 PM (IST)

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 8, ஜூலை 2025 3:41:11 PM (IST)

அரசு பங்களாவை 2 வாரத்தில் காலி செய்து விடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
திங்கள் 7, ஜூலை 2025 4:45:26 PM (IST)
