» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு!
சனி 7, ஜூன் 2025 4:16:08 PM (IST)
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறங்களிலும், சாலையின் நடுப்பகுதியிலும் மரக்கன்றுகள், செடிகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு நேரங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வண்ண விளக்குகள் வைக்கவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் மதுரை, தூத்துக்குடி இடையிலான 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தூத்துக்குடியை சேர்ந்த பாண்டியன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாலையை முறையாக பராமரிக்கவில்லை எனக்கூறி எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு, வருகிற 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)










