» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து: பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி!!
சனி 10, மே 2025 4:56:04 PM (IST)
இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய திட்டமிட்ருந்தார். திட்டத்தின் படி, குடியரசுத் தலைவர் முர்மு கேரள மாநிலம், நிலக்கல் ஹெலிபேடில் தரையிறங்கி, பின்னர் பம்பாவிலிருந்து சபரிமலைக்கு மலையேற்றப் பாதையில் ஏற இருந்தார்.இதையொட்டி முர்முவின் பயன்பாட்டிற்காக சன்னிதானத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் இரண்டு அறைகளை திருவிதாங்கூர் தேவசம் வாரியம் புதுப்பித்திருந்தது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பொது தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதால் இந்த நாள்களில் பக்தர்களின் பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி வங்கப்பட்டிருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)










