» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை: ஜேபி நட்டா
திங்கள் 7, ஏப்ரல் 2025 3:40:50 PM (IST)
வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அவை சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்று மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜேபி நட்டா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்: துருக்கி மற்றும் பல முஸ்லிம் நாடுகளில் உள்ள வக்பு சொத்துகளை அரசே தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இங்கு வக்பு சொத்துகளை யாா் கையாளுகிறாா்கள் என்பதை மட்டுமே அரசு கேட்கிறது. அதனை நிா்வகிப்பவா்கள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்கிறது.வக்பு வாரியங்களை நிர்வகிப்பவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் அதைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே கேட்டுக்கொள்கிறோம்.வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. வக்பு சொத்துகளும் நிதியும் முஸ்லிம்களின் கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி வக்பு வாரியம் செயல்படுவது உறுதி செய்யப்படும்" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:02:00 PM (IST)

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)










