» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மியான்மர் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் : பிரதமர் மோடி உறுதி

சனி 29, மார்ச் 2025 4:33:53 PM (IST)

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அதே சமயம், மீட்புப் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மியான்மர் அரசின் தலைவரும், ராணுவ ஜெனரலுமான மின் ஆங் ஹிலாங்கிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததாகவும், இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் 'ஆபரேஷன் பிரம்மா' மூலம் இந்தியா சார்பில் மியான்மர் மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்படி மியான்மருக்கு இதுவரை சுமார் 15 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory