» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லி பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
திங்கள் 17, மார்ச் 2025 5:34:02 PM (IST)

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
5 நாட்கள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவரை உயர்மட்ட குழுவினர் வரவேற்றனர். இந்நிலையில், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை இன்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சந்தித்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கிறிஸ்டோபர் லக்சன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர், இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா, நியூசிலாந்து இடையே வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி, வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:31:57 PM (IST)

கோவையில் ஏழுமலையான் கோயில் பணிகள் விரைவில் துவங்கும் : தேவஸ்தான அதிகாரி தகவல்
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:29:04 PM (IST)

பணி நேரத்தில் பெண்களுடன்... ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 11:49:20 AM (IST)

பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ பரவல் - உயிரை மாய்த்த நபர்!
திங்கள் 19, ஜனவரி 2026 3:30:50 PM (IST)

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்? விஜய்யிடம் சிபிஐ கேள்வி
திங்கள் 19, ஜனவரி 2026 12:54:46 PM (IST)

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழக நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:36:39 AM (IST)








