» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய பட்ஜெட்: மாநில அரசுகளுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை

சனி 22, ஜூன் 2024 3:50:06 PM (IST)

மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், நாட்டின் மூத்த பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் அவர், மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதனிடையே, மாநாட்டிற்கு சென்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை செயலர் உதயசந்திரன் ஆகியோர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். 

அப்போது, மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 வது கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதுடன், அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். பேரிடர் பாதித்த பகுதுிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory