» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கருணை மதிப்பெண் ரத்து விவகாரம்: 1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு!

சனி 22, ஜூன் 2024 12:32:26 PM (IST)

கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு குஜராத் உட்பட 7 மாநிலங்களில் நாளை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' தேர்வின் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்டன. இதில் அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றதும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது. நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நாடு முழுவதிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனிடையே கருணை மதிப்பெண் அளித்ததை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மறுதேர்வு நடத்தக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது கடந்த 13-ந் தேதி விசாரணை நடந்த நிலையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கனு அகர்வால், 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு வருகிற 23-ந் தேதி மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி 1,563 மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேகாலயா, அரியானா, சத்தீஷ்கார், குஜராத் மற்றும் சண்டிகார் ஆகிய மாநிலங்களில் 7 தேர்வு மையங்களில் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளின் கண்காணிப்பில் தேர்வு நடத்தப்படும் என்றும், மறுதேர்வை சுமுகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory