» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு : 31 மாத இடைவெளிக்கு பின் சட்டசபைக்குள் நுழைந்தார்!

சனி 22, ஜூன் 2024 10:49:24 AM (IST)வந்தால் முதல்வராக தான் இந்த சட்டசபைக்கு வருவேன் என சபதமிட்டு சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் சபதத்தை நிறைவேற்றிய உற்சாகத்தில் 31 மாத இடைவெளிக்கு பின் முதல்முறையாக சட்டசபைக்கு வந்தார்.

பாராளுமன்ற லோக்சபாவுடன் ஆந்திர சட்டசபைக்கும் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 171 இடங்களில் 135 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த 12-ம் தேதி பதவியேற்றார்.

முன்னர் எதிர்கட்சி தலைவராக இருந்த போது தன்னையும் , தன் குடும்பத்தையும் அப்போதைய ஓய்.எஸ்.ஆர்.காங். கட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் அவதூறாக பேசியதால் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது இனி இந்த சபைக்கு வந்தால் முதல்வராகத்தான் நுழைவேன் என சபதமிட்டார்.

நேற்று (21.06.2024) ஆந்திர சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது, போட்ட சபதத்தை நிறைவேற்றிய உற்சாகத்தில் 31 மாத இடைவெளிக்குபின் சட்டசபைக்குள் முதல்வராக நுழைந்தார். தொடர்ந்து கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory