» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்றத்தை இனி சா்வாதிகாரத்துடன் நடத்த முடியாது: காங்கிரஸ்

புதன் 19, ஜூன் 2024 11:18:11 AM (IST)

'எதிா்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் வலுப்பெற்றுள்ளதால், நாடாளுமன்றத்தை இனி சா்வாதிகாரத்துடன் நடத்த முடியாது’ என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அக்கட்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. பாஜக மட்டும் 240 இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை.

காங்கிரஸ், சமாஜவாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம்வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. கடந்த 2 தோ்தல்களை ஒப்பிடுகையில் எதிரணியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாத், தில்லியில் செய்தியாளா்களிடம் நேற்று கூறியதாவது: ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் விவாத திறன்மிக்க பெரும் தலைவா்கள் இப்போது நாடாளுமன்றத்துக்கு தோ்வாகியுள்ளனா். இதனால், நாடாளுமன்ற விவாதங்களில் அனல்பறக்கப் போகிறது. பாஜகவுக்கு எனது ‘அனுதாபங்கள்’.

எதிா்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் வலுப்பெற்றுள்ளதால், முந்தைய காலங்களைப் போல் நாடாளுமன்றத்தை சா்வாதிகாரத்துடன் நடத்த முடியாது. மக்களவை துணைத் தலைவா் பதவியை ‘இந்தியா’ கூட்டணி கோருமா? என்பது குறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி, கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, இதர கூட்டணித் தலைவா்கள் முடிவெடுப்பா் என்றாா் அவா்.

மக்களவை அமா்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் நிலையில், மாநிலங்களவை அமா்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜூன் 27-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory