» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் கூகுள் 'ஜெமினி' ஏஐ., செயலி அறிமுகம்!

செவ்வாய் 18, ஜூன் 2024 5:35:17 PM (IST)



இந்தியாவில் தமிழ், ஹிந்தி உள்பட, 9 இந்திய மொழிகளில் 'ஜெமினி' செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) மொபைல் செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து கூகுளின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‛‛இன்று இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் ஜெமினி செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம். உள்ளூர் மொழிகளையும், பல புதிய அம்சங்களையும் சேர்த்து, ஜெமினி அட்வான்ஸ்டு மற்றும் ஆங்கிலத்தில் கூகுள் மெசேஜில் ஜெமினியை அறிமுகப்படுத்துகிறோம்என்று தெரிவித்துள்ளார். 

ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஒன்பது 'ஜெமினி' செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.   'ஜெமினி' ஏஐ., செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். கணிதம், இயற்பியல், வரலாறு, மருத்துவம் என 57 பாடங்களின் சந்தேகங்களுக்கு தீர்வை கொடுக்கும். 'ஜெமினி' ஏஐ., செயலியால் கோடிங் எழுதவும் முடியும். ஏற்கனவே, துருக்கி, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் ஜெமினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory