» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வயநாடு தொகுதியில் ராகுல் ராஜிநாமா: பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்!
செவ்வாய் 18, ஜூன் 2024 11:50:51 AM (IST)
வயநாடு தொகுதியில் எம்பி பதவியை ராகுல் ராஜிநாமா செய்துள்ள நிலையில், அங்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி களம் கண்டாா். இரு தொகுதிகளில் வென்ற ராகுல், தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து 14 நாள்களுக்குள்(ஜூன் 18) ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியது கட்டாயம்.
வயநாட்டில் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி.யாகப் பதவியேற்கப் போவதில்லை என்று நேற்று (ஜூன் 17) அறிவித்தார். இதையடுத்து, இது குறித்து மக்களவைத் தலைவர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார். அதில் ரேபரேலி தொகுதியைத் தக்க வைப்பதாக தெரிவித்துள்ளார். வயநாட்டில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் பிரியங்கா காந்தி முதன் முறையாக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.