» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குவைத் தீ விபத்தில் பலியான 31 பேரின் உடல்கள் கொச்சி வந்தடைந்தது!
வெள்ளி 14, ஜூன் 2024 11:03:41 AM (IST)

குவைத் தீ விபத்தில் பலியானவர்களில் 31 பேரின் உடல்கள், ராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது.
கொச்சி விமான நிலையத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, கேரள அமைச்சர்கள், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.இதனைத் தொடர்ந்து, கொச்சி விமான நிலையத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு சடலங்களை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 196 போ் வசித்து வந்த நிலையில், புதன்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளத்தை சேர்ந்த 23 தொழிலாளர்களின் உடல்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும், கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் கொச்சி கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வரும் பணியை மேற்கொள்வதற்காக மத்திய வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் தலைமையிலான குழு நேற்று காலை குவைத் சென்றடைந்தது. இந்த நிலையில், 45 பேரின் உடல்களையும் இந்திய ராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அந்த விமானத்திலேயே வெளியுறவுத் துறை இணையமைச்சர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகளும் வந்தடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் அமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா
செவ்வாய் 8, ஜூலை 2025 4:39:15 PM (IST)

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 8, ஜூலை 2025 3:41:11 PM (IST)

அரசு பங்களாவை 2 வாரத்தில் காலி செய்து விடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
திங்கள் 7, ஜூலை 2025 4:45:26 PM (IST)

பீகார் தொழிலதிபர் சுட்டுக்கொலை: இறுதிச் சடங்குக்கு வந்த குற்றவாளி கைது!
திங்கள் 7, ஜூலை 2025 11:48:28 AM (IST)

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை: பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:09:32 AM (IST)

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)
