» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டம்!

சனி 25, மே 2024 12:19:41 PM (IST)ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்  முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி களம் காண்கிறார். இந்நிலையில், மெகபூபா அனந்தநாக் தொகுதியில் தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி போலீசார் கைது செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். போலீசாரின் அத்துமீறலை கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் மெகபூபா முப்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory