» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: ஆம் ஆத்மிக்கு வாக்களித்த சோனியா, ராகுல்!

சனி 25, மே 2024 11:25:28 AM (IST)



நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பிறகு தனது தயார் சோனியா காந்தியுடன் எடுத்துக்கொண்ட செல்பியை ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் புதுடெல்லி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கிறார்கள். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் சோம்நாத் பாரதி போட்டியிடுகிறார். எனவே இன்று நடைபெறும் தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பம் சின்னத்துக்கு வாக்களித்து உள்ளனர். 

இதேபோல் சாந்தினி சவுக் தொகுதியில் வசிக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்காக கை சின்னத்தில் வாக்களிக்கிறார். இதுவரை பாரம்பரியமாக கை சின்னத்துக்கு வாக்களித்து வந்த சோனியா காந்தி குடும்பம், இந்த முறை ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கவுள்ளனர். அதுபோல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கை சின்னத்துக்கு வாக்களித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory