» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.17 வரை நீட்டிப்பு..!!
திங்கள் 15, ஏப்ரல் 2024 4:32:02 PM (IST)
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32-வது முறையாக ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த முறை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 32-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டியாலா சிறையிலிருந்து பி.ஆர் பாண்டியன் விடுவிப்பு: 5 நாள் சிறைவாசம் முடிந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 7:53:30 PM (IST)

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விருப்பமா? 10 நாட்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்!
திங்கள் 24, மார்ச் 2025 5:43:37 PM (IST)

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் கல்வியை எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி
திங்கள் 24, மார்ச் 2025 5:17:59 PM (IST)

டெல்லி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : நீதிபதி விளக்கம்
திங்கள் 24, மார்ச் 2025 8:50:46 AM (IST)

குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது : காங்கிரஸ் கருத்து!
சனி 22, மார்ச் 2025 5:50:46 PM (IST)

எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம்: பிரதமர் மோடி
சனி 22, மார்ச் 2025 5:33:10 PM (IST)
