» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கல்வீச்சில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டி: மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார்!

திங்கள் 15, ஏப்ரல் 2024 3:31:28 PM (IST)கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த சனிக்கிழமை அன்று விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள சிங் நகர், விவேகானந்தா பள்ளி மையம் அருகே அவர் பிரச்சாரம் செய்தபோது, கூட்டத்திலிருந்த மர்ம நபர், திடீரென ஜெகன் மோகன் ரெட்டியை நோக்கி கல் வீசினார்.

இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடதுபக்க நெற்றியில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பிரச்சாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் நேற்று ஒரு நாள், ஜெகன்மோகன் ரெட்டி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவர் விஜயவாடா, கேசரப்பள்ளியில் இருந்து இன்று மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory