» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜார்க்கண்டில் ரூ.35ஆயிரம் கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!
வெள்ளி 1, மார்ச் 2024 4:55:09 PM (IST)

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.35ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜார்க்கண்டில் ரூ,35,700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்குள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள சிந்த்ரி பகுதியில் ரூ.8,900 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் உர்வராக் மற்றும் ரசாயன லிமிடெட் உரத்தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிந்த்ரியில் நடைபெற்ற விழாவில் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யூரியா உற்பத்தி செய்யும். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் யூரியா உற்பத்தி 2014-ல் 225 லட்சம் டன்னாக இருந்தது. இது தற்போது 3,10 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இன்று ரூ.35 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை ஜார்க்கண்ட் பெற்றுள்ளது. சிந்த்ரி உர ஆலையை புதுப்பிப்பது மோடியின் உத்தரவாதமாக இருந்தது.
அது இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இந்தியா யூரியாவில் தன்னிறைவு பெறும் என தெரிவித்தார். இதுதவிர, ஜார்க்கண்டில் ரூ.26,000 கோடி மதிப்பிலான ரெயில், மின்சாரம் மற்றும் நிலக்கரி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்? திருச்சி சிவா கேள்வி
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:40:32 PM (IST)

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மான கடிதம் வழங்கிய இண்டியா கூட்டணி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:11:33 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திங்கள் 8, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!!
திங்கள் 8, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறும்: டி.கே.சிவகுமாா்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:37:23 AM (IST)

எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் அளித்த குடும்பத்தினர் மீது வழக்கு: நாட்டிலேயே முதல்முறை!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:34:56 AM (IST)










