» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு

வெள்ளி 1, மார்ச் 2024 11:39:39 AM (IST)

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

சமூக மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் மாநிலங்களுக்கு வரிப்பகிர்வை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு.

பல்வேறு சமூக நலன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதில் மாநிலங்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு 3 ஆவது தவணையாக ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25.495 கோடி விடுவித்துள்ளது. 

தொடர்ந்து பிகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.11.157 கோடியும், மகாராஷ்டிரத்துக்கு ரூ.11,157, மேற்கு வங்கத்துக்கு ரூ.8,978 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி, ஆந்திரத்துக்கு ரூ.5,752 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.9564 கோடி, மணிப்பூருக்கு ரூ.1,018 கோடி, அருணாசலத்துக்கு ரூ.2,497 கோடி, அஸ்ஸாம் ரூ.4,446 கோடி, கோவா ரூ.549 கோடி, குஜராத் ரூ.4,943 கோடி, ஜார்காண்ட் ரூ.4,700 கோடி, கர்நாடகம் ரூ.5,183 கோடி, கேரளத்துக்கு ரூ.2,736 கோடி, மிசோரம் 7,11 கோடி, சிக்கிம் ரூ.551 கோடி என ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வாக மத்தியில் ஆளும் பாஜக அரசு விடுவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory