» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மணிப்பூரில் இணைய சேவை தடை மேலும் நீட்டிப்பு : மாநில அரசு உத்தரவு!

புதன் 29, நவம்பர் 2023 11:39:52 AM (IST)

மணிப்பூரில் இணைய சேவை தடையை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டது

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த மே மோதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. 7 மாதங்களுக்கு மேலாகியும் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. இதனிடையே கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் பரப்பப்படுவதை தடுக்க மாநிலம் முழுவதும் மே 3-ந்தேதி இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மணிப்பூரில் இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று இரவு முடிவுக்கு வந்த நிலையில் தடையை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டது. அதன்படி வருகிற 5-ந்தேதி இரவு 7.45 மணி வரை இணைய சேவைக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

திருடர்Nov 30, 2023 - 02:56:56 AM | Posted IP 172.7*****

வகையறா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory