» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண்களை ஏமாற்றி 93 பவுன், ரூ.9 லட்சம் மோசடி: பெண் எஸ்ஐ அதிரடி கைது!
வெள்ளி 28, ஏப்ரல் 2023 5:07:02 PM (IST)
கேரளத்தில் அதிக லாபம் தருவதாக கூறி 2 பெண்களை ஏமாற்றி 93 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் பெண் எஸ்ஐயை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தவனூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்யஸ்ரீ (47). அங்குள்ள வளாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் படித்த திருச்சூர் பழையன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்து, தனக்கு பணம் தந்தால் ஒரு வருடத்தில் அதற்கு கூடுதல் வட்டியும், லாபமும் தருவதாக கூறி இருக்கிறார். அதை நம்பி அந்த பெண் பல தவணைகளாக 93 பவுன் நகைகளையும், ரூ.1.5 லட்சம் பணத்தையும் ஆர்ய யிடம் கொடுத்துள்ளார். அதேபோல பாலக்காடு அருகே உள்ள ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடமும் ரூ.7.5 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். பல வருடங்கள் ஆன பிறகும் 2 பேருக்கும் வட்டியையோ, லாபத்தையோ ஆர்ய கொடுக்கவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஒற்றப்பாலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து எஸ்ஐ ஆர்ய யை கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)










