» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹிந்துத்துவம் குறித்து சா்ச்சை கருத்து: கன்னட நடிகா் சேத்தன்குமாா் சிறையில் அடைப்பு!

புதன் 22, மார்ச் 2023 12:03:45 PM (IST)

ஹிந்துத்துவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த கன்னட நடிகா் சேத்தன்குமாா்  சிறையில் அடைக்கப்பட்டாா்.

கன்னட நடிகா் சேத்தன்குமாா் (40), மாா்ச் 20ஆம் தேதி தனது ட்விட்டா் பக்கத்தில், ‘ஹிந்துத்துவம் பொய்களால் கட்டமைக்கப்பட்டது. அதை உண்மையால் மட்டுமே வீழ்த்த முடியும். அந்த உண்மை, சமத்துவம்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இந்தக் கருத்துக்கு எதிராக சிவக்குமாா் என்பவா் பெங்களூரில் சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். 

அந்தப் புகாரின்பேரில், சேத்தன்குமாா் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 295ஏ, 505(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பெங்களூரில் சேத்தன் குமாரை போலீஸாா் நேற்று கைது செய்தனா். அவரை போலீசார், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நடிகா் சேத்தன்குமாரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடா்ந்து, அவா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கா்நாடக அரசுப்பள்ளிகளில் ஹிஜாப் அணிவது தொடா்பான வழக்கை விசாரித்து வந்த உயா்நீதிமன்ற நீதிபதி குறித்து தெரிவித்திருந்த சா்ச்சைக்குரிய கருத்தைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடிகா் சேத்தன்குமாா் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory