» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் 110 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை நடவடிக்கை!

புதன் 22, மார்ச் 2023 11:55:23 AM (IST)

நாட்டின் இறையான்மைக்கு எதிராக தகவல் வெளியிட்ட 110 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அனுராக் தாகூர், பத்திரிகை தகவல் அலுவலகத்தின், உண்மையை சரிபார்க்கும் பிரிவு, ஆயிரத்து 160 செய்திகள் பொய்யானவை என்று கண்டுபிடித்துள்ளது. மக்கள் அனுப்பும் கேள்விகள் அடிப்படையிலும், தாமாக முன்வந்தும் செய்திகளின் உண்மைத்தன்மையை இந்தப் பிரிவு பரிசோதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory