» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது: ராகுல்காந்தி

செவ்வாய் 21, மார்ச் 2023 10:21:18 AM (IST)

நான் உண்மையில் நம்பிக்கை உள்ளவன். போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது என  ராகுல்காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான வயநாடுக்கு சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எத்தனையோ பேர், பிரதமர், பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., போலீஸ் ஆகியோரைப் பார்த்து பயப்படலாம். 

ஆனால் நான் சிறிது கூட பயப்பட மாட்டேன். அதுதான் அவர்களுக்கு பிரச்சினை. ஏனென்றால் நான் உண்மையில் நம்பிக்கை உள்ளவன். நான் எவ்வளவு தாக்கப்பட்டாலும், என் வீட்டுக்கு எத்தனை தடவை போலீஸ் அனுப்பப்பட்டாலும், என் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும் எனக்கு பயம் கிடையாது. போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது. நான் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பேன் என  ராகுல்காந்தி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory