» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளது: கனிமொழி புகார்!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 5:18:32 PM (IST)

ஆளுநர் ஆர்.என். ரவியின் தமிழக அரசுக்கு எதிராகவே இருப்பதாக மக்களவையில் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இன்று குடியரசுத் தலைவர் உரை மீது விவாதம் நடைபெற்றபோது பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, "தமிழகம், கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். 

தமிழகத்தில் மட்டும் சட்டப்பேரவை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல். பாஜக உறுப்பினர் ஜோஷி பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து வருத்தப்பட வைப்பதாக உள்ளது. தமிழகத்தில் தற்போது தேர்தல் எதுவும் இல்லை என்பதால் குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை எனவும் விமர்சித்தார். 


மக்கள் கருத்து

தலைசிறந்த உருட்டுFeb 8, 2023 - 12:00:48 PM | Posted IP 162.1*****

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ஒழிக்கப்படும், மதுவிலக்கு ஒழிக்கப்படும், குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய், திமுக உருட்டப்பட்ட பல உருட்டுகள்...

ஆமாFeb 8, 2023 - 11:58:33 AM | Posted IP 162.1*****

ஆளுநர் விருந்துக்கு அழைத்தால் மட்டும் ஓசி சோறுக்காக திங்க போவார்களாம் சில MP க்கள். என்ன வகையான அரசியல்வாதிகள்.

PODHU JANAMFeb 8, 2023 - 09:19:51 AM | Posted IP 162.1*****

thamilaha arasin +thimuka vin seyalpadukal makkalin ennaththidku ethiraka ulladhu. Sutrusoolal kurithu esum kanimozhi penavai araivalayaththil vaikka yen solla villai. tamil valrchchi + neer vala membadukkaka diravidam enna kiliththadhu indha 50years il

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory