» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது : பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் உரை!
புதன் 1, பிப்ரவரி 2023 11:21:07 AM (IST)

உலகமே கடுமையான சூழலை சந்தித்துள்ள வேளையில் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதலைப் பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர், "இந்தியாவை இந்த உலகமே ஓர் ஒளிரும் நட்சத்திரமாகப் பார்க்கிறது. உலகமே கடுமையான சூழலை சந்தித்துள்ள வேளையில் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்த பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், தொழில் துறையினருக்கு உகந்ததாக இருக்கும்" என்றார்.
முன்னதாக இன்று காலை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்தப் பேட்டியில், "மத்தியில் மோடி தலைமையில் அரசு அமைந்ததில் இருந்தே ஒவ்வொரு பட்ஜெட்டும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. வரிச் சலுகைகளைப் பொறுத்தவரையில் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் பட்ஜெட் எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST)

கார்-பஸ் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி: மகா கும்ப மேளாவுக்கு சென்றபோது சோகம்!
சனி 15, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST)

வாரணாசியில் 3வது தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி பெருமிதம்
சனி 15, பிப்ரவரி 2025 4:07:56 PM (IST)

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன் முறையாக ரூ.262 கோடி லாபம் ஈட்டி சாதனை!
சனி 15, பிப்ரவரி 2025 12:15:07 PM (IST)

ஜெயலலிதாவின் நகைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரிய ஜெ.தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:40:04 PM (IST)

இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி அறிமுகம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 3:36:04 PM (IST)
