» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்றம் - துணை ஜனாதிபதி மாளிகை இடையே சுரங்கப்பாதை: மத்திய அரசு திட்டம்!

செவ்வாய் 4, அக்டோபர் 2022 11:22:20 AM (IST)



டெல்லியில் துணை ஜனாதிபதி மாளிகையை புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் இணைத்து சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 

தலைநகர் டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பொது தலைமை செயலகம், புதிய பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம், புதிய துணை ஜனாதிபதி மாளிகை (வீடு மற்றும் அலுவலகம்) ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ராஜபாதை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள கட்டிடங்களின் பணிகளும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்படும் ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அந்தவகையில் துணை ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

அதாவது பிரதமர் இல்லத்துக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் இடையே எதிர்காலத்தில் அமைய உள்ள சுரங்கப்பாதை வழியாக மேற்படி சுரங்கப்பாதை செல்லும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் முக்கிய பிரமுகர்களின் பயணங்களால் அடிக்கடி போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துணை ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை ரூ.21 கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கான பணிகள் தொடங்கிய 4 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதற்கான டெண்டரை மத்திய பொதுப்பணித்துறை நேற்று வெளியிட்டது. டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கடைசி நாள் வருகிற 15-ந்தேதி ஆகும். இந்த சுரங்கப்பாதை 185 மீட்டர் நீளமும், 6.20 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory