» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகாரில் நிதீஷ் குமார் அமைச்சரவை விரிவாக்கம் : புதிதாக 31 அமைச்சர்கள் பதவியேற்பு!

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:50:11 PM (IST)

பீகாரில்  நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தில் 31 எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் சார்பில் முதல்-அமைச்சராக நிதீஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால் நிதிஷ் குமார் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கடந்த 9-ந்தேதி விலகினார்.

பின்னர் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-அமைச்சரானார். பீகார் மாநில முதல்-அமைச்சராக 8-வது முறையாக அவர் கடந்த 10-ந்தேதி பதவியேற்று கொண்டார். பீகார் மாநில துணை முதல்-அமைச்சராக ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்று கொண்டார். இதனை தொடர்ந்து, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 

இதில், ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மதன் சாஹ்னி, ஷீலா குமாரி மண்டல், ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் லலித் குமார் யாதவ், சந்திரசேகர், அனிதா தேவி, சுதாகர் சிங், முகமது இஸ்ரைல் மன்சூரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. முராரி பிரசாத் கவுதம் உள்ளிட்டோர் அமைச்சர்களாக இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

பீகார் அமைச்சரவையில் முதல்-அமைச்சர் உள்பட 36 அமைச்சர்கள் இடம் பெற முடியும். எனினும், சில அமைச்சர் பதவிகள் காலியாக விடப்பட்டு உள்ளன. வருங்காலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது அந்த பதவிகள் நிரப்பப்படும் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory