» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது: உச்ச நீதிமன்றம் கருத்து!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 12:42:54 PM (IST)
மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
![](https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/SUPREME_COURT_8596f_1537946505_1660202000.jpg)
அரசியலமைப்புச் சட்டம் 293 (3), (4) ஆகியவற்றுக்கு முரணாக, ஏற்கெனவே மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன்பெறுகின்றன. ஆகையால், கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
அப்போது, இலவச வாக்குறுதிகள் தொடர்பான வழிநாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை மறுத்த உச்ச நீதிமன்றம், இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது. இதைக் கொடுங்கள் இதைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் இந்தியா போன்ற நாட்டில் அதனை செயல்படுத்த முடியாது.
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். எனவே, ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்பதால் அதனை உச்ச நீதிமன்றம் செய்யாது. பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில், மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/murde34i4i_1722060930.jpg)
பெங்களூருவில் விடுதிக்குள் நுழைந்து இளம்பெண் குத்திக் கொலை - வாலிபர் கைது!
சனி 27, ஜூலை 2024 11:45:32 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/kargilwarmemoral_1721988998.jpg)
கார்கில் போர் 25வது ஆண்டு நினைவு தினம் : பிரதமர் மோடி அஞ்சலி!
வெள்ளி 26, ஜூலை 2024 3:45:09 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/mullaiperiyaru123_1721973228.jpg)
முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் இல்லை: அமைச்சர் தகவல்!
வெள்ளி 26, ஜூலை 2024 11:22:45 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/mamatha_1721909733.jpg)
பிரதமர் தலைமையில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு: மம்தா உறுதி
வியாழன் 25, ஜூலை 2024 5:45:17 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/ashwinivaishnav_1721823610.jpg)
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
புதன் 24, ஜூலை 2024 5:49:51 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/subramanyaswamynirmala_1721804967.jpg)
நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும், பாடவும் மட்டுமே தெரியும்: சு.சுவாமி விமர்சனம்!
புதன் 24, ஜூலை 2024 12:40:05 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/nirmalakarge_1721802060.jpg)