கோடம்பாக்கத்திற்கு இன்னொரு புதிய நயன்தாரா!

கோடம்பாக்கத்திற்கு இன்னொரு புதிய நயன்தாரா!
பதிவு செய்த நாள் ஞாயிறு 20, ஜூன் 2010
நேரம் 3:39:37 PM (IST)

நடனப்புயலின் காதல் வலைக்குள் சிக்கியதால் நயன்தாராவின் மீது கவலைக்கொண்ட ரசிகர்களுக்கும், கோடம்பாக்கத்துக்காரர்களுக்கும் ஒரு நற்செய்தி, கோடம்பக்கத்தில் புதிய நயன்தாராவாக அடியெடுத்து வைத்திருக்கிறார் புதுமுக நாயகி மேக்னா சுந்தர். 'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், 'தப்புத்தாளங்கள்', 'உதிரிப்பூக்கள்' போன்ற படங்களில் நடித்த சுந்தர் மற்றும் 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த பிரமிளா தம்பதியின் மகள் ஆவார். 'காதல் சொல்ல வந்தேன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாடல்காட்சிகளை பார்த்த திரைபிரமுகர்கள் அனைவரும் மேக்னாவை நயன்தாரா போலவே இருக்கிறார் என்று பாராட்டி தள்ளிவிட்டனர். இதை கேட்ட மேக்னாவின் முகத்தில் இன்னும் கொஞ்சம் அழகு கூடிவிட்டது. நயன்தாரா போல முன்னணிக்கு வந்தா சரிதான்.Thoothukudi Business Directory