விஜய் அசின் நடிக்கும் காவல்காரன் ஷூட்டிங் ஸ்பாட்

விஜய் அசின் நடிக்கும் காவல்காரன் ஷூட்டிங் ஸ்பாட்
பதிவு செய்த நாள் ஞாயிறு 25, ஏப்ரல் 2010
நேரம் 12:38:35 PM (IST)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறார் அசின். சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின். மலையாளத்தில் திலீப், நயன்தாரா நடிப்பில் உருவான பாடிகா‌ர்ட் படத்தின் ‌‌ரீமேக்தான் இந்தப் படம். பாடிகா‌ர்ட் படத்தில் பணக்கார நயன்தாராவை பாதுகாக்கும் பாடிகா‌ர்ட் ஆக நடித்திருந்தார் திலீப். தமிழில் அசினின் பாடிகா‌ர்ட், விஜய். பாடிகா‌ர்டை தமிழில் பாதுகாவலன் என்று மொழிபெயர்க்கலாம். இன்னும் கொஞ்சம் இறங்கி வந்தால் காவல்காரன் என்றும் சொல்லலாம். காவல்காரன் எம்.‌ஜி.ஆர். நடித்த படத்தின் தலைப்பு. விடுவாரா விஜய்? அதையே தனது படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்.Thoothukudi Business Directory