நமீதாவுக்கு சரியான போட்டியாக குருசிஷ்யனில் சுருதி

நமீதாவுக்கு சரியான போட்டியாக குருசிஷ்யனில் சுருதி
பதிவு செய்த நாள் வியாழன் 22, ஏப்ரல் 2010
நேரம் 9:58:46 AM (IST)

தனது கவர்ச்சியைப் பிரதானமாக வைத்து தமிழ் திரைக் களத்தில் குதித்துள்ள ஹேமமாலினி என்கிற சுருதி படு வேகமாக வளர்ந்து வருகிறாராம். நமீதாவுக்கு சரியான போட்டியாக கருதப்படுபவர் சுருதி. இந்திரா விழா படத்தில் முதலில் அறிமுகமானவர் சுருதி. அப்போது இவரது பெயர் ஹேமமாலினி. தொடர்ந்து குரு சிஷ்யன் படத்தில் முழு நீளக் கவர்ச்சி காட்டி அசத்தினார். இநதிர விழா படத்துக்குப் பின்னர் தனது பெயரை சுருதி என்று மாற்றிக் கொண்டார் ஹேமமாலினி. உண்மையில் அதுதான் அவரது ஒரிஜினல் பெயராம். கவர்ச்சிகரமா நடிக்க தான் தயங்கவே மாட்டேன் என்று வெளிப்படையாக பேசும் சுருதியை, திரையுலகில், நமீதாவுக்கு இணையாக வைத்துப் பேசுகிறார்களாம். அதாவது ஜூனியர் நமீதா என்று கூறும் அளவுக்கு இவரைப் பற்றிச் சிலாகிக்கிறார்களாம். ஆனால் நமீதா எங்கே, நான் எங்கே. அவர் சீனியர் என்று அடக்கம் ஒடுக்கமாக பாராட்டுக்களை ஏற்றுக் கொள்கிறார் சுருதி. தமிழில் அழுத்தமாக காலூன்ற ஆரம்பித்துள்ள சுருதி, சைடில் கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து விட்டார். திருட்டுப் பயலே கன்னடத்தில் ரீமேக் ஆனபோது அதில், சோனியா அகர்வால் தமிழில் நடித்த வேடத்தில் சுருதி நடித்துள்ளாராம். கவர்ச்சி மெயின், மற்றதெல்லாம் சைடு என்ற கொள்கையுடன் கோலிவுட்டைக் கலக்க ஆரம்பித்தள்ள சுருதி, விரைவிலேயே நமீதாவை ஓவர் டேக் செய்வார் என ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் கோலிவுட்டில்.Thoothukudi Business Directory