சுந்தர் சி. ஷெ‌ரில் பி‌ரிண்‌ட்டோ நடிக்கும் வாடா.

சுந்தர் சி. ஷெ‌ரில் பி‌ரிண்‌ட்டோ நடிக்கும் வாடா.
பதிவு செய்த நாள் ஞாயிறு 11, ஏப்ரல் 2010
நேரம் 1:05:29 PM (IST)

வாடா இம்மாதம் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது. வழக்கமான கமர்ஷியல் படமான இதில் சுந்தர் சி.க்கு ஜோடியாக ஷெ‌ரில் பி‌ரிண்‌ட்டோ நடிக்கிறார். இவர் விஜயகாந்தின் அரசாங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். வாடாவில் ஷெ‌ரில் பி‌ரிண்‌ட்டோ எம்‌.ஜி.ஆர். ரசிகையாக நடித்துள்ளார். பொதுவாக ஹீரோதான் எம்‌.ஜி.ஆர். ரசிகராக நடிப்பார். ஒரு மாறுதலுக்கு இந்தப் படத்தில் ஹீரோயின். அவர் வரும் காட்சிகள் கலகலப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம். சுருளிராஜன் கெட்டப்பில் நடித்துள்ளார் விவேக். ஏதாவது கெட்டப் போடாமல் காமெடி பண்ண முடியாது என்ற வறட்சிக்கு விவேக் தள்ளப்பட்டு வெகு காலமாகிறது. சுருளிராஜன் பொறுத்தருள்வதாக. டி.இமான் இசையில் என்னடி ராக்கம்மா பாடலை ‌‌ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்.Thoothukudi Business Directory