ரஜினி மொட்டை பாஸில் தோன்றும் எந்திரன் புதிய படங்கள்

ரஜினி மொட்டை பாஸில் தோன்றும் எந்திரன் புதிய படங்கள்
பதிவு செய்த நாள் ஞாயிறு 11, ஏப்ரல் 2010
நேரம் 10:58:44 AM (IST)

எந்திரன் எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில் இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளார். அதே நேரம் காட்சியமைப்புகளின் சில சாம்பிள்களைப் பார்த்து சன் நிறுவனமே பிரமித்துப் போனதாம். ஹாலிவுட் படங்களைப் போலல்லாமல், ஒரு ஹாலிவுட் படமாகவே எந்திரன் வந்திருப்பதில் ஏக திருப்தி அவர்களுக்கு. கிராபிக்ஸில், பிரமாண்ட த்துக்கான செலவில் என எதிலும் காம்ப்ரமைஸ் வேண்டாம்… என்று ஷங்கரிடம் சன் கூறிவிட்டதாம். இந்தப் படத்தில் நூறு ரஜினிகள் தோன்றும் காட்சிகள் பிரமிப்பின் உச்சமாக இருக்கும் என்கிறார்கள்.இன்னொரு காட்சியில், ரோபோ ரஜினி கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தோன்ற வேண்டும். இதை ரஜினியிடம் சொல்ல முதலில் சற்றுத் தயங்கிய ஷங்கர், பின்னர் சொல்லிவிட, ‘கூல்’ என சொல்லிவிட்டு சம்மதித்தாராம் ரஜினி. இந்தக் காட்சி படமாக்கல் குறித்து வெளியில் செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்பதற்காக, தரமணியில் உள்ள சன் ஸ்டுடியோவிலேயே படமாக்கியுள்ளனர். கேமராமேன் ரத்னவேலு, ஷங்கர் உள்ளிட்ட மூவர் தவிர, செட்டிலிருந்த மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டனர் அந்த நேரத்தில்.Thoothukudi Business Directory