விஜய் நடிக்கும் சுறா

விஜய் நடிக்கும் சுறா
பதிவு செய்த நாள் ஞாயிறு 21, மார்ச் 2010
நேரம் 4:59:32 PM (IST)

மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுறா, நாலு காய் பாய்ச்சலில் முன்பாகவே வரப்போகிறது. இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சன். இப்படி அஸ்திரத்தை ஏவுவார்கள் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம் சிங்கம். சாண் ஏறினால் சாண் சறுக்குகிற நிலையில்தான் இருந்தார் விஜய். சமீபத்தில் வெளிவந்த அவரது படங்கள் இழுத்துக்கோ பறிச்சிக்கோ நிலையில்தான் வசூலை சந்தித்தது. இனிமேல் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அதிரடியாக இருக்கணும் என்று முடிவெடுத்த விஜய், சுறாவின் றெக்கையை சாணை பிடித்துதான் வைத்திருக்கிறாராம். படத்தின் அத்தனை காட்சிகளும் செம ஷார்ப், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கியாரண்டி என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.Thoothukudi Business Directory