ஜெயம் ரவி தமன்னா நடிக்கும் தில்லாலங்கடி

ஜெயம் ரவி தமன்னா நடிக்கும் தில்லாலங்கடி
பதிவு செய்த நாள் புதன் 10, பிப்ரவரி 2010
நேரம் 8:48:20 PM (IST)

தில்லாலங்கடி ஏற்கனவே தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட ‘கிக்’ படத்தை வாங்கி தமிழில் ‘தில்லாலங்கடி’யாக்குகிறார்கள். இந்தப் படத்தின் ஹீரோ ஜெயம் ரவியேதான். இயக்குபவர் அவர் அண்ணன் ஜெயம் ராஜாதான். ரவிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஷாம் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலு, பிரபு, சத்யன், சந்தானம், சுஹாசினி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே களம் இறங்குகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.Thoothukudi Business Directory